ஏரிகள் நிரம்பவில்லை; மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்..! அமைச்சர் உதயகுமார் அறிவிப்பு #chennairain

சென்னையை சுற்றியுள்ள எந்த ஏரிகளும் அதனுடைய முழுக் கொள்ளவை எட்டவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 


சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. அதனால், சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் மக்கள் வெள்ளம் வரும் அபாயம் இருப்பதாக அச்சப்படும் நிலையும் இருந்துவருகிறது. இந்தநிலையில் இதுகுறித்து தெரிவித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 'சென்னையை சுற்றியுள்ள எந்த ஏரிகளும் அதனுடைய முழுக் கொள்ளவை எட்டவில்லை. சமூக வலைதளங்களில் மழை குறித்து பரவும் வதந்திகளை நம்பவேண்டாம். நோய்த்தொற்று பரவாமல் இருக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தடையில்லாமல் போக்குவரத்து வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது' என்று தெரிவித்தார். சாலைகளில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!