வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (03/11/2017)

கடைசி தொடர்பு:13:32 (03/11/2017)

மழைப் பாதிப்பு குறித்து அமைச்சருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

மழைப் பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் வேலுமணியுடன் ஆலோசனை நடத்தினார். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு முழுவதும் கனமழை வெளுத்துவாங்கியது. அந்த மழையின் காரணமாகச் சென்னையின் பல பகுதிகள் நீரில் மிதக்கத்தொடங்கின. சுரங்கப்பாதைகள் மற்றும் பல்வேறு பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளான முடிச்சூர், கோவிலம்பாக்கம் பகுதிகளில் வீடுகள் இருக்கும் பகுதிகளில் இடுப்பளவுக்குத் தண்ணீர் புகுந்தது. இந்தநிலையில், அமைச்சர் வேலுமணியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிரீன்வேஸ் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்திவருகிறார். மின்சாரத்துறை அமைச்சர் வேலுமணியும், சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை மின்அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.