சென்னையில் பெய்த மழையின் முழு விவரம்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேற்று சென்னை நகரை மழை புரட்டிப்போட்டது. மாலையில் பெய்யத் துவங்கிய மழை இரவில் மிகத்தீவிரம் காட்டியது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. 

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று காலை மழை ஓரளவுக்கு ஓய்ந்த நிலையில் உள்ளது. தூறல் மட்டும் போட்டபடி உள்ளது. இந்நிலையில், சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. 

அதன்படி, சென்னை மெரினா டி.ஜி.பி அலுவலகம் அருகே 29.6 செ.மீ. மழை பெய்துள்ளது.  2015ம் ஆண்டுக்குப்பிறகு இந்த அளவுக்கு மிக அதிக மழை சென்னையில் பெய்துள்ளது. அடுத்ததாக, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகே 21.3 செ.மீ. மழையும்,  சத்யபாமா பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் 20.4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.


மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம்:
கேளம்பாக்கம், தரமணி-19.3 செ.மீ.
நுங்கம்பாக்கம்-18.3 செ.மீ.
மீனம்பாக்கம்-14.2 செ.மீ.
தண்டையார் பேட்டை-13.8 செ.மீ.
அயனாவரம்-12 செ.மீ.
திருப்போரூர், பெரம்பூர்-11.5 செ.மீ.
மகாபலிபுரம்-11.2 செ.மீ.
புழல்-9.1 செ.மீ.
சோழவரம் ஏரி-8.6 செ.மீ.
ரெட்ஹில்ஸ் ஏரி-8.1 செ.மீ.
பொன்னேரி-7.7 செ.மீ.
அம்பத்தூர்-7.2 செ.மீ.
தாமரைப்பாக்கம்-7.1 செ.மீ.
செம்பரப்பாக்கம்-6.9 செ.மீ.
கும்மிடிப்பூண்டி-6.1 செ.மீ.
மேற்கண்ட விவரம் 'தமிழ்நாடு வெதர்மேன்' ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!