கனமழை நேரத்தில் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் இயக்கத்தில் என்ன நடந்தது?

மெட்ரோ ரயில்

நேரு பார்க் முதல் திருமங்கலம் வரை சுரங்கப்பாதையில் செல்லும் மெட்ரோ ரயில் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. சென்னையில் கடந்த நான்கு நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சுரங்க மெட்ரோ ரயிலில் பயணிப்பது பாதுகாப்பானது தானா? என்று மக்களிடம் ஒருவித அச்சம் எழுந்துள்ளது.

கடந்த 3-ம் தேதி நேரு பார்க் முதல் திருமங்கலம்வரை சுரங்கத்தில் செல்லும் மெட்ரோ ரயிலில் பயணித்தோம். நேரு பார்க் ரயில் நிலையத்தில் கீழ் செல்லும் படிகளின் இறுதியில் மேற்கூரை ஒழுகியது. தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
சுரங்கத்தில் உள்ள டிக்கெட் விநியோகிக்கும் இடம், பிளாட்பாரம் ஆகியவற்றில் எந்தவித மழை பாதிப்புகளும் இல்லை. வழக்கம் போல நேரு பார்க்- விமான நிலையம் இடையேயும், விமான நிலையம் முதல் நேருபார்க் இடையேயும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. 30-ம் தேதி முதல் கனமழை பெய்து வந்த போதிலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் எந்த வித பாதிப்புகளும் இல்லை. ரயில் செல்லும் சுரங்க பாதைகளிலும் எந்த பிரச்னைகளும் இல்லை. சிக்னல் கோளாறுகளோ, ரயில் இயங்குவது தடைபடவோ இல்லை.
விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு அல்லது நேருபார்க் வருபவர்கள், கடந்த சில நாள்களாக மெட்ரோ ரயிலில் செல்லத் தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாகக் கடந்த 2-ம் தேதி மாலை சென்னை மற்றும் சென்னைப் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்தது. இதையடுத்து மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு பலர் ஆர்வம் காட்டினர். மெட்ரோ ரயிலில் பயணித்த சிலரிடம் பேசினோம்.

சுரேஷ், திருமங்கலம்;சுரேஷ்

“வடபழனியில் ஒரு திருமணம் நடந்தது. காலையில் கிளம்பும்போது மழை பெய்ததால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான் பேருந்தில் சென்றிருந்தால், என்னால் சரியான நேரத்துக்குச் சென்றிருக்க முடியாது. மெட்ரோ ரயிலில் 15 நிமிடங்களில் வடபழனி போய் விட்டேன். திருமணத்தில் பங்கேற்று விட்டு மீண்டும் மெட்ரோ ரயிலிலேயே திரும்பிவிட்டேன். மழையால் மெட்ரோ ரயிலில் எந்தவித பாதிப்பும் இல்லை.

பாபு, மாதவரம்;

பாபு "நான் மாதவரத்திலிருந்து திருமங்கலம் வந்து, இங்கிருந்து பரங்கி மலைக்கு மெட்ரோ ரயிலில் செல்கிறேன். தொடர்ந்து பயணித்து வருகிறேன். மழை காரணமாக எந்தவிதத் தாமதமும் இல்லை. ஆனால், இரவு ஒரு மணி வரை மெட்ரோ ரயில் இயக்கினால் நன்றாக இருக்கும். குறிப்பாக எல்லா நாள்களும் இல்லாவிட்டாலும் கூட, இந்த மழை நாள்களிலாவது இரவு ஒரு மணி வரை மெட்ரோ ரயிலை இயக்கலாம். 2-ம் தேதி இரவு அலுவலகம் முடிந்து வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. மெட்ரோ ரயில் இல்லாததால், டாக்சியில்தான் வந்தேன்."

செந்தில்குமார், ஆலந்தூர் ;

"ஆலந்தூரிலிருந்து அண்ணா நகரில் உள்ள ஆபீசுக்கு தினமும் வருகிறேன். செந்தில் குமார் மெட்ரோ ரயிலில் பயணிப்பதால் நேரம் மிச்சமாகிறது. மழை காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லை. என்னால் சரியான நேரத்துக்கு ஆபீஸ் செல்ல முடிகிறது."

ரம்யா;

"மெட்ரோ ரயிலில் ரெகுலராக வருகிறேன். இதுவரை எந்தவித பிரச்னையையும் சந்தித்தது இல்லை. இப்போதும் மழை ரம்யா காரணமாக எந்தவிதப் பிரச்னையும் இல்லை. இது எனக்கு வசதியாக இருக்கிறது."

ஜெயன், பரங்கிமலை;

“நான் எப்போதுமே மெட்ரோ ரயிலில்தான் வருகிறேன். எனக்கு இதுதான் வசதியாக இருக்கிறது. மழை தண்ணீர் எதுவும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் வரவில்லை. பாதுகாப்பாகப் பயணிக்க முடிந்தது."  
மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மழை நீர் உள்ளே புகாதவாறு  நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. கனமழை பெய்தாலும் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. பயணிகள் வருகை வழக்கம்போல் இருக்கிறது. குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் மக்கள் அதிகம் பேர் வருகின்றனர். அப்படியே பிரச்னை ஏற்பட்டாலும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்" என்று முடித்துக் கொண்டார்.

மின் ரயில் சேவை பாதிப்பு

மெட்ரோ ரயில்

சென்னையின் பல பகுதிகளில் கடந்த 2-ம் தேதி இரவு கனமழை பெய்ததால் தாம்பரம்-கடற்கரை இடையேயான ரயில் போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன. ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால், ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் மிகவும் வேகம் குறைவாக இயக்கப்பட்டன.

2015-ம் ஆண்டு பெருமழையின்போது, மாநகரப் பேருந்து போக்குவரத்து சீராக இருந்தது. அதேநேரத்தில் மின் ரயில்கள் இயக்குவது தடைபட்டது. வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிறுத்தப்பட்டன. அதே நேரத்தில் ஆலந்தூரிலிருந்து கோயம்பேடு வரை மெட்ரோ  ரயில்கள் இயக்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!