Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏரிகள் நீர்மட்டம் உயர்ந்தால் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்..! வருவாய் ஆணையர் உறுதி

ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்தால் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். 


சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. நேற்றைக்கு முந்தைய நாள் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. குறிப்பாக, முடிச்சூர் மற்றும் கோவிலம்பாக்கம் பகுதிகளில் அதிகளவு நீர் புகுந்தது. நேற்று இரவு டெல்டா பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைஞாயிறு பகுதியில் 27 செ.மீ மழையும், திருப்பூண்டியில் 24 செ.மீ மழையும், வேதாரண்யத்தில் 16 செ.மீ மழையும், திருத்துறைப்பூண்டியில் 12 செ.மீ மழையும் பெய்துள்ளது.

தென் சென்னை பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை இன்று இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அவருடயை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை புறநகர் பகுதிகளிலுள்ள ஏரிகள்குறித்து கருத்து தெரிவித்த வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால், 'பூண்டி ஏரியின் கொள்ளவு 35 அடி. அதில் 25 அடி வரை மட்டுமே நிரம்பியுள்ளது. செம்பரம்பாக்க ஏரியின் முழுக்கொள்ளவான 17 அடியில் 7 அடி மட்டுமே தற்போது நிரம்பியுள்ளது. ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தால் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement