வெளியிடப்பட்ட நேரம்: 06:28 (13/11/2017)

கடைசி தொடர்பு:15:32 (13/11/2018)

மழை காரணமாக மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மழை

தமிழகத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்தது. இதனால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரிலான விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கின. தலைநகர் சென்னையும், புறநகர்ப் பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கும் சூழல் ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். கடந்த சில நாள்கள் மழை குறைந்திருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மீண்டும் மழைபெய்யத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்துவருகிறது. இந்நிலையில், இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர் மாவட்ட ஆட்சியர்கள்.