வெளியிடப்பட்ட நேரம்: 01:31 (23/08/2017)

கடைசி தொடர்பு:10:24 (23/08/2017)

'இம்சை அரசன் பார்ட் -2' ஃபர்ஸ்ட் லுக் - ஷங்கர் வெளியிட்ட புதிய வீடியோ!

'வைகைப் புயல்' வடிவேலுவின் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படப் பட்டியலில், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' முக்கிய படமாக இருக்கும். அந்தப் படத்தில் வடிவேலு பயன்படுத்திய வசனங்கள், இன்றைக்கும் ரசிகர்களால் பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டு வருகின்றன. 

imsai arasan


இந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரவிருப்பதாகத் தகவல் வெளிவந்தது முதல் இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. நடிகர் வடிவேலு, தற்போது விஜய் உடன் 'மெர்சல்' படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் முழுவீச்சில் நடித்துவருகிறார்.

இந்தப் படத்தை, இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' மற்றும் 'லைக்கா நிறுவனம்' இணைந்து தயாரிக்கின்றன. முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தில், வடிவேலுவின் ஜோடி யார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. 
இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தப் படம் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யில் வரும் புகழ்பெற்ற வசனமான 'ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலதிலக'  என்ற வசனத்தோடு, நாளை முதல் ராஜபார்வை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், ஷங்கர் வெளியிட்ட இந்த வீடியோ யூடியூப்  சேனலின் பெயர்,  'IA24P Team' என்று போடப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டாம் பாகத்தின் பெயர், "இம்சை அரசன் 24-ம் புலிகேசி" ஆக இருக்கலாம்.

 

 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி ஸ்டூடியோவில் செட் அமைத்து நடைபெற்றுவருகிறது.  ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், அரசர் காலத்து அரண்மனையைப்  பிரமாண்டமாக அமைத்திருக்கிறார்.