வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (25/08/2017)

கடைசி தொடர்பு:17:42 (25/08/2017)

மணிமேகலை, ரம்யா, கீர்த்தி சாந்தனு, அஞ்சனா... இவர்களின் ஃபேவரைட் கடவுள் யாராம்? #GaneshChaturthi

கீர்த்தி

லருக்கும் பிடித்த செல்லக் கடவுள், பிள்ளையார். நமக்கு மிகவும் பிடித்த யானை முகத்துடன் காட்சி அளிப்பதால் இந்த ஸ்பெஷல். நமது வீட்டில் ஒருவராக நினைத்து உரிமையோடு பேசி வழிபடுவோம், குட்டி பர்ஸில் விநாயகர் படமோ, குட்டி சிலையோ வைத்துக்கொள்வோம். பெண்களின் மனதுக்கு மிக நெருக்கமாக அந்தச் செல்லக் கடவுளை, தினந்தோறும் நாம் பார்த்து ரசிக்கும் செல்லமான வீஜேக்களுக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும்? அஞ்சனா சன் டி.வி, மணிமேகலை சன் டி.வி, ரம்யா விஜய் டி.வி, கீர்த்தி சாந்தனு ஜீ தமிழ் ஆகியோரிடம் பேசினோம். இனி ஓவர் டூ விஜேக்கள்

அஞ்சனா, அசத்தல் சுட்டீஸ், சன்-டி.வி

அஞ்சனா சன் டி.வி - கடவுள் பற்றி

''எனக்கு ரொம்ப ஸ்பெஷலான கடவுள், பிள்ளையார். எங்க வீட்டில் எந்த விஷயம் வந்தாலும் விநாயகர் கோவிலுக்கு போயிட்டு வந்துதான் ஆரம்பிப்போம். ஏதாச்சும் வேணும்னு மனம் உருகி பிரார்த்தனை பண்றதும் இந்த மாணிக்க விநாயகரிடம்தான். என் கணவர் வீட்டிலும் விநாயகர்தான் ஃபேவரைட் கடவுள். சமீபத்தில், கார் வாங்கினேன். ஷோரூமிலிருந்து நேரா போனது விநாயகர் கோவிலுக்குத்தான். அந்த அளவுக்கு விநாயகரோடு எனக்கு நெருக்கம்.'' 

மணிமேகலை, ஃப்ரீயா விடு, சன் மியூசிக்

மணிமேகலை சன் டி.வி - பிள்ளையார் பற்றி

''மத்த கடவுள்களை கும்பிடும்போது, வாங்க, போங்கனு ஒரு பயத்தோடு கும்பிடுவேன். ஆனா, விநாயகர் என் ஃப்ரெண்டு மாதிரி. வேண்டுதலையே ஆர்டர் மாதிரி பண்ணுவேன். 'இங்கே பாரு... ஒழுங்கா இதை நிறைவேற்றலைன்னா உன்னோடு பேசமாட்டேன்னு' சொல்லிடுவேன். ஒவ்வொரு வருஷமும் விநாயகர் சதுர்த்தியை பிராப்பரா கொண்டாட நினைப்பேன். ஆனால், வொர்க் காரணமாக அப்படி இருக்க முடியாமல் போயிடும். பார்ப்போம்... இதுக்கும் என் ஃப்ரெண்டு விநாயகரே ஒரு வழி காட்டுவார்னு நம்பறேன்.'' 

ரம்யா, விஜய் டி-வி

ரம்யா

''சின்ன வயசிலிருந்து என்ன எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிப்பேன். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கோயில் இருக்கு. அந்தப் பிள்ளையாரை எனக்கு அவ்வளவு பிடிக்கும். தினமும் ஸ்கூலுக்கு போகும்போது அவரைப் பார்த்து கும்பிட்டுட்டுதான் போவேன். பிள்ளையார் சதுர்த்தி வந்தாலே செம ஹேப்பியா ஃபீல் பண்ணுவேன். அன்னிக்கு ஒண்ணை வேண்டிக்கிட்டா அது எனக்குக் கண்டிப்பா நடக்கும். என் சின்ன வயசில் விநாயகர் சதுர்த்தியை பிராப்பரா கொண்டாடுவாங்க. மண் விநாயகர் வாங்கி, அலங்கரிச்சு, பூஜை பண்ணிட்டு கடலில் கொண்டுபோய் கரைப்போம். அப்பா, அம்மா கத்துக்கொடுத்த அந்த விஷயங்களை நான் ஃபாலோ பண்ணிட்டிருக்கேன். எங்க வீட்டுச் செல்லப் பிள்ளைச்ரை பார்க்கிறதுக்கு வாங்களேன்!'' 

கீர்த்தி சாந்தனு, ஜீனியர் சூப்பர் ஸ்டார் சீசன்2, ஜீ தமிழ் :

கீர்த்தி சாந்தனு - பிள்ளையார் பற்றி

''எனக்குச் சின்ன வயசிலிருந்து ஃபேவரைட் கடவுள். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோயில்தான் என் எக்ஸாம் டைம் ஸ்பாட். சாமி கும்பிட்டு வந்து எழுதினால் நல்ல மார்க் வாங்குவேன்னு முழு நம்பிக்கை. விவரம் தெரிஞ்ச வயசிலிருந்து என் பிறந்தநாளுக்கு அந்த விநாயகர் கோவிலுக்குத்தான் போறேன். 11 தேங்காய்களை உடைப்பேன். என் அப்பா காலையில் எழுந்ததும் குளிச்சு, விநாயகரைக் கும்பிட்டுட்டுதான் தண்ணீரையே குடிப்பார். ஒவ்வொரு நியூ இயர் நைட் 12 மணிக்கு ஷார்ப்பா அந்த விநாயகர் கோயில் இருப்பேன். புது வருஷம் பிறக்கும்போது விநாயகர் முன்னாடி இருக்கணும்னு இன்னிக்கு வரை ஃபாலோ பண்றேன்.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்