Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டண்ட் யூனியனின் பொன் விழா- ரஜினி, மோகன்லால், பாலகிருஷ்ணா பங்கேற்பு

ஸ்டண்ட் யூனியனின் பொன்விழா கொண்டாட்டம் சென்னையில் இன்று மாலை தொடங்கியது.  ரஜினி, மோகன்லால், நந்தமூரி பாலகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணித் தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

ஸ்டண்ட யூனியன் விழாவில் ரஜினி பங்கேற்பு

'தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சண்டைக் கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கம்' என்ற பெயரில் சினிமா சண்டை கலைஞர்களுக்கென்று தனி சங்கம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதற்கான விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை  5 மணியளவில் தொடங்கியது. இந்த விழாவில் ரஜினி, மோகன்லால், நந்தமூரி பாலகிருஷ்ணா உள்ளிட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட திரையுலகை சேர்ந்த  தென்னிந்திய நட்சத்திரங்கள் திரளாக பங்கேற்றுள்ளனர். 

மோகன்லால்

நடிகர்கள் ஜீவா, பரத், காஜல் அகர்வால், ஸ்ரேயா உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வழக்கமான பாட்டு, டான்ஸ் என்று நடைபெறும் நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், மேடையில் ஸ்டண்ட் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக டான்ஸ் மாஸ்டர் கலா செயல்படுகிறார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement