சர்வதேச வசூல் சாதனைகளைத் தவிடுபொடியாக்கும் 'டங்கல்'! | Dangal continues its dream run in box office

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (29/08/2017)

கடைசி தொடர்பு:17:30 (29/08/2017)

சர்வதேச வசூல் சாதனைகளைத் தவிடுபொடியாக்கும் 'டங்கல்'!

அமீர் கான் நடிப்பில் ஹிந்தி படமான 'டங்கல்' ஹாங்காங்கிலும் வசூல் சாதனை புரிந்துள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியானது அமீர் கான் நடப்பில் உருவான 'டங்கல்' திரைப்படம். பல்வேறு மொழிகளில் வெளியான இந்தப் படம், ரிலீஸான அத்தனை மொழிகளிலும் வசூல் சாதனை புரிந்தது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் வெளியான டங்கல், யாரும் எதிர்பாராத வகையில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது. இதையடுத்து, டங்கல் திரைப்படம் ஹாங்காங்கில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. ஹாங்காங்கிலும் டங்கல் படம் வெளியான ஒரு வாரத்துக்குள்ளேயே 6 மில்லியன் ஹாங்காங் டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் இருக்கும். டங்கல் திரைப்படம் வெளியாகி ஓர் ஆண்டு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், இதுவரை வெளிநாடுகளில் ரிலீஸான இந்திய திரைப்படங்களின், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை எல்லாம் டங்கல் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.