மனிதர்களைப் போல கழிவறையைப் பயன்படுத்தும் அசத்தல் நாய்! | Akshay Kumar shares video of his dog uses toilet

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (30/08/2017)

கடைசி தொடர்பு:13:30 (30/08/2017)

மனிதர்களைப் போல கழிவறையைப் பயன்படுத்தும் அசத்தல் நாய்!

டிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான 'டாய்லட் ஏக் பிரேம் கதா' இந்தித் திரைப்படம், ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகி சக்கைக்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. வீட்டில் கழிவறை இல்லாத காரணத்தினால் ஏற்படும் பிரச்னையை மையமாக வைத்துதான், டாய்லட் படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. அக்‌ஷய் குமார், புமி பென்டேகர், அனுபம் கெர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

செலவே இல்லாமல் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம்,  இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மூன்று வாரங்களாக,' டாய்லட்' ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அக்‌ஷய் குமார் இரு நாள்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ வேறு, 'டாய்லட்' படத்தை மேலும் பாப்புலராக்கியுள்ளது. 

கழிவறையை பயன்படுத்தும் நாய்

அக்‌ஷய் வெளியிட்டுள்ள வீடியோவில் பதிவாகியிருந்த காட்சிகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், சிந்திக்கவும்வைக்கிறது. வீடியோவில் நாய் ஒன்று கழிவறையில் சிறுநீர் கழித்த பின்னர், டாய்லட்டில் தண்ணீரைத் திறந்துவிடுகிறது. மனிதர்களே கழிவறையை முறையாகப் பயன்படுத்தத் தவறும் நிலையில், நாய் சிறுநீர்க் கழித்துவிட்டு தண்ணீரையும் திறந்துவிடும் காட்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நாயை, நடிகர் அக்‌ஷய் குமாரே வளர்த்துவருகிறார். அதற்கு, கழிவறையை முறையாகப் பயன்படுத்தவும் பயிற்சி அளித்திருக்கிறார். அந்த நாய்க்கும் அதை வளர்த்துவரும் அக்‌ஷய் குமாருக்கும் பாராட்டு குவிந்துவருகிறது. இணையத்திலும் வீடியோ வைரலாகியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close