வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (31/08/2017)

கடைசி தொடர்பு:15:21 (31/08/2017)

`மை டியர் பூதம்` சீரியல் குட்டீஸ் இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

2004 முதல் 2007 வரை சன் டிவியில் ஒளிபரப்பான `மை டியர் பூதம்` நாடகத்தை பார்க்காத குழந்தைகளே இல்லை. அந்த அளவிற்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளை தன்வசப்படுத்தி வைத்திருந்தது அந்த சீரியல். `மூசா வா மூசா வா` என்ற வசனம் அந்த காலகட்டத்தில் குழந்தைகள் அடிக்கடி முணுமுணுக்கும் வார்த்தை. அந்த நாடகத்தில் நடித்த குழந்தைகள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய அவர்களை தேடிப் பிடித்தோம். 

அபிலாஷ் - மூசா :

அபிலாஷ்

இவர் தான் கதையின் நாயகர். எதாவது பிரச்னை என்றால் `மூசா வா` என்று சொன்னால் வந்து உதவி பண்ணும் மூசா இப்போது பொறியியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) முடித்துவிட்டு சினிமா துறையில் பயணித்து கொண்டிருக்கிறார். 465 என்ற படத்திற்கு எக்சிக்யூடிவ் ப்ரொட்யூசராக பணியாற்றி இருக்கிறார். `தோனி கபடி குழு` படத்தில் கதாநாயகனாக தோன்ற இருக்கிறாராம். இப்போது, ஆரி நடிக்கும் `நாகேஷ் திரையரங்கம்` படத்தில் ப்ரொடக்‌ஷன் கன்ட்ரோலராகவும் கூடவே படத்தில் முக்கியமான ரோலிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் நம்ம மூசா. 

பரத் - பாலு :

பரத்

நாடகத்தில் சேட்டைப் பையனாக இருந்த பாலு இப்போ ரொம்ப பிஸி. மெக்கட்ரானிக்ஸ் முடித்து கையுடன் டிசைனிங் கோர்ஸ் படித்துக்கொண்டு இருக்கிறாராம். `இன்ஜினியரிங் படிச்சதுனால படம் பண்ண முடியாம போயிருச்சு ப்ரோ. ரொபாட்டிக்ஸ் ஆராய்ச்சியில் அதிக ஆர்வமா இருக்கேன். அதற்காக தான் டிசைனிங் கூட அனிமேஷனும் சேர்த்து படிக்கப்போறேன்` என்று ஜாலியாக பேசுகிறார். தமிழ், தெலுங்கு படம் என படங்களிலும் கமிட்டாகி பிஸியாக இருக்கிறார் நம்ம பாலு. 

கெளதம் - கெளதம் :

கெளதம்

நாடகத்தில் இவருக்கும் இவர் சகோதரிக்கும் உதவி செய்யதான் பூதம் வரும். இந்த கெளதம் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி முடித்துவிட்டு தற்போது தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே எம்.பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறார். சில குறும்படங்களில் நடித்த இவர், `இப்போ எனக்கு கெரியர்தான் ஃபர்ஸ்ட். கெரியரை நிலைப்படுத்திவிட்டு மீண்டும் கண்டிப்பாக திரைக்கு வருவேன்` என பாசிட்டிவ் எனர்ஜியுடன் இருக்கிறார். 

நிவேதா தாமஸ் - கெளரி :

மை டியர் பூதம்

மூசாவின் தோழியும் கெளதமின் சகோதரியாக வரும் கெளரிதான் இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் நிவேதா தாமஸ். ஜில்லாவில் விஜய் தங்கையாகவும், பாபநாசம் படத்தில் கமல் மகளாகவும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆர்க்கிடெக்ட் கடைசி வருடம் படிக்கும் இவர், சினிமாவிலும் கேப் விடாமல் வெளுத்து வாங்குகிறார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

ஹரிதா - சந்தியா :

மை டியர் பூதம்

கெளதம் - கெளரியின் தோழியாக வரும் சந்தியா ஆர்க்கிடெக்ட் நான்காம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறார். கூடவே, விளம்பரங்களிலும் நடித்து கொண்டிருந்த இவர் `கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்`, `தூவன்` ஆகிய இரண்டு படங்களில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துகொண்டிருக்கிறார். படிப்பு, சினிமா என ஹரிதா ஒரே பிஸி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்