துல்கர் சல்மான் நடித்திருக்கும் ’சோலோ’ படத்தின் இரண்டாவது டீசர்..! | Solo movie World of Siva teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (02/09/2017)

கடைசி தொடர்பு:11:37 (02/09/2017)

துல்கர் சல்மான் நடித்திருக்கும் ’சோலோ’ படத்தின் இரண்டாவது டீசர்..!

’டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் துல்கர் சல்மானை வைத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கிவரும் திரைப்படம் சோலோ. இந்தப் படத்தில் நான்கு வேடங்களில் நடிக்கிறார் துல்கர். அதில் ஒரு கதாபாத்திரமான ருத்ராவின் டீசரை சில நாள்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தனர். தற்போது மற்றொரு கதாபாத்திரமான சிவாவின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர்.  

இந்தப் படத்தில் 11 மியூசிக் டைரக்டர்ஸ், மூன்று ஒளிப்பதிவாளர்கள் என பெரிய படையே வேலை செய்துவருகிறது. ’இந்தப் படத்தில் துல்கர் நான்கு கேரக்டரில் நடித்திருந்தாலும், கெட்டப்களில் வித்தியாசங்கள் இருந்தாலும் ஒவ்வொரு கேரக்டரைப் பற்றியும் கதை சொல்லும். அதனால்தான் 'சோலோ' என டைட்டில் வைத்தேன்’ என்று இயக்குநர் பிஜாய் நம்பியார் கூறியிருந்தார்.