Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னுடைய படத்தில் ஓவியாவா? - இயக்குநர் டி.கே பதில்

நடிகர் கிருஷ்ணா, ஓவியா, கருணாகரன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம், 'யாமிருக்க பயமேன்'. டி.கே இயக்கிய இந்தப் படம், ஹாரர் ஜானராகும். இந்தப் படத்துக்குப் பிறகு, டி.கே ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் 'கவலை வேண்டாம்' திரைப்படம் எடுத்தார். தற்போது இவர், அடுத்த படத்துக்கு ரெடியாகியுள்ளார்.

deekey

இதுபற்றி டி.கே-விடம் பேசியபோது, ''என்னுடைய அடுத்த ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிவிட்டேன். இது ஹாரர் மூவியா என்றால், நிச்சயமாக இல்லை. ஆனால், அட்வென்சர்தான் இந்தப் படத்தின் ஜானர். 'யாமிருக்க பயமே' படத்தின் இரண்டாம் பாகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றவரிடம், 'யாமிருக்க பயமே' படத்தில் நடித்த ஓவியா உங்கள் அடுத்தப் படத்தில் நடிப்பரா என்றால்,

படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி டிஸ்கஷன் போய்க்கொண்டிருக்கிறது. ஓவியா இருப்பாரா இல்லையா என்பது படம் பற்றிய அறிவிப்பின்போது தெரியவரும் என்றார். படத்துக்கான ஷூட்டிங் இரண்டு மாதத்தில் ஆரம்பமாகும் என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close