Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துபாயில் இசை... ஹைதராபாத்தில் டீசர்... சென்னையில் டிரெய்லர்..! - 2.0 அப்டேட்ஸ்

rajini

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம், '2.0'. எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அதற்கான காரணம், இவர்கள் கூட்டணியில் உருவான 'சிவாஜி, 'எந்திரன்' உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்ததுதான். 

2.0

இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி, எதிர்பார்ப்பை எகிறவைத்த நேரத்தில், படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் எப்போது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமாகிய லைகாவின் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அக்டோபரில் படத்தின் ஆடியோ துபாயில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், நவம்பரில் படத்தின் டீசர் ஹைதராபாத்திலும், டிசம்பர் மாதம் ட்ரெய்லர் சென்னையில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close