வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (07/09/2017)

கடைசி தொடர்பு:21:45 (07/09/2017)

கரு.பழனியப்பன் படத்தின் டைட்டில் ரெடி

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படத்தின் பெயர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பிருந்தாவனம் படத்துக்குப் பிறகு, மு.மாறன் இயக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. படத்தின் ஷூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் சமீபத்தில்தான் இந்தப் படத்தின் டீசர் வெளியானது. 

இந்தப் படத்துக்குப் பிறகு, அருள்நிதி கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப் போவதாகத் தகவல் வந்தது. அரசியல் களத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும் எனவும் தகவல் வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்று வெளியாகியுள்ளது. அதில் படத்துக்கான பெயராக 'புகழேந்தி எனும் நான்' என வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தை ஆக்‌ஷஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கிறது. படத்துக்கான இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளார். பாடல் வரிகளை யுகபாரதி எழுதவுள்ளார். படப்பிடிப்பு டிசம்பரில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க