மணிரத்னம் படத்தில் ஜோதிகா!

36 வயதினிலே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த இவர். நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்தபிறகு தமிழ் சினிமாவை விட்டு விலகியிருந்தார். 

jyothika


தற்போது சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் இவர் தற்போது பிரம்மா இயக்கத்தில் 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்திருக்கிறார். சிறிது நாள்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலானது. மேலும், இந்தப் படத்தை ஜோதிகாவின் கணவர் சூர்யா தனது சொந்தத் தயாரிப்பில் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் சரண்யா பொன்வண்ணன், பானுப்பிரியா, ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

விரைவில் வெளிவரப் போகும் இந்தப் படத்துக்கு பிறகு,  பாலா இயக்கத்தில் ' நாச்சியார்' படத்தில் நடித்து வருகிறார்.  இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோதிகாவை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் இவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மணிரத்னம் தயாரிப்பில் மட்டும் நடித்திருந்த ஜோதிகா விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பதுதான் அந்த அறிவிப்பு. மணிரத்னம் கடைசியாக நடிகர் கார்த்தியை வைத்து 'காற்று வெளியிடை' படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!