வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (09/09/2017)

கடைசி தொடர்பு:12:51 (09/09/2017)

கோலிசோடா-2 திரைப்படத்தின் ஆடியோ டீசர்..!

ஒரு படத்துக்கு வீடியோ டீசர் வெளியாகி பார்த்திருப்போம். ஆனால், முதல் முறையாக ஆடியோ டீசர் வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். தீபாவளி, காதல், வழக்கு எண்: 18/9 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன், இயக்குநராக அவதாரம் எடுத்து சில படங்களையும் இயக்கியுள்ளார். அதில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கோலி சோடா'.  கோயம்பேட்டில் இருக்கும் பசங்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொன்ன இந்தப் படம் ஹிட் அடித்தது. அதன் காரணமாகத் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் விஜய் மில்டன். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

 

இந்த படத்துக்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். தீபக் படத்தொகுப்பாளராகப் பணிபுரியும் இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார். தற்போது இந்தப் படத்தின் ஆடியோ டீசரை ட்விட்டரில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நேற்று வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆடியோ டீசருக்கு கெளதம் வாசுதேவ் மேனன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். பரபரப்பாகப் படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் ஜனவரிக்கு ரிலீஸாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க