Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’களவாணி-2 படத்தில் ஓவியா நடிக்கவில்லை..!’’ - விமல்

பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படத்தின் மூலமாகப் பலருக்கும் அறிமுகமானவர் நடிகர் விமல். இந்தப் படத்துக்குப் பிறகு, சற்குணம் இயக்கத்தில் இவர் நடித்த 'களவாணி' திரைப்படம் விமலுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விமல் தற்போது 'மலைக்கோட்டை', 'திருவிளையாடல் ஆரம்பம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கத்தில் 'மன்னர் வகையறா' படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக ஆனந்தியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் விமல், இந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார். இதுபற்றி விமலுடன் பேசினோம். 

kalavanni

''இந்தப் படம் வில்லேஜ் சம்பந்தப்பட்ட கதைதான். படத்தில் ஒரு சட்டம் படித்த பையனாக வருகிறேன். இந்தப் படத்தில் எனக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறாங்க. இந்தப் படத்தில் ஆக்‌ஷன், காமெடி என எதற்கும் குறைவில்லாமல் பக்கா பொழுதுபோக்குப் படமாகயிருக்கும். முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர்தான் இந்தப் படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. சில காரணங்களுக்காக அவரால் தயாரிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் நானே இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தேன்’’ என்றவர், மேலும் தொடர்ந்தார்,

''இந்தப் படத்தைத் தொடர்ந்து 'களவாணி 2' படத்தையும் நானே தயாரிக்கவுள்ளேன். 'களவாணி 2' படத்தை செர்லி மூவீஸ் நஸீர் தயாரிப்பதாகத் தகவல் வந்தது. அது முற்றிலும் தவறான தகவல். 'மன்னர் வகையறா' ஷூட்டிங் இன்னும் 10 நாள்களில் முடிந்துவிடும். இதன் பிறகு, அடுத்த மாதம் களவாணி 2 படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும். தஞ்சாவூரில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் இந்தப் படத்தில் நாயகி ரோலில் ஓவியா நடிக்கவில்லை. புதுமுகம் ஒருவர்தான் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பார். படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்'' என்று கூறியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close