வைரலாகிவரும் ’ஜிமிக்கி கம்மல்’ வீடியோக்களின் தொகுப்பு! | Jimmiki kammal video collection

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (09/09/2017)

கடைசி தொடர்பு:17:53 (09/09/2017)

வைரலாகிவரும் ’ஜிமிக்கி கம்மல்’ வீடியோக்களின் தொகுப்பு!

மோகன்லால் நடிப்பில் ஓணம் தினத்தன்று வெளியான திரைப்படம் ’வெளிப்பாடிண்டே புஸ்தகம்’. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ’ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடலின் வீடியோவை, படத்தின் ரிலீஸுக்கு முன்னரே வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ கேரளா மக்களுக்கு மட்டுமல்லாது மற்ற மாநிலத்துக்கு மக்களுக்கும் பிடித்திருந்தது.

’வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்றிருந்த ’ஜிமிக்கி கம்மல்’ பாடல் வீடியோ 

எர்ணாகுளத்தில் இருக்கும் புனித தெரசா கல்லூரி மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து ஓணம் திருநாளைக் கொண்டாடும் வகையில், இந்த ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு குழுவாக நடனம் ஆடினர். அதை வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளனர். அது பலருக்கும் பிடித்துப்போக இணையத்தில் ட்ரெண்டானது. அந்த வீடியோவைப் பார்த்து பலரும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினரோடு நடனமாடி அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து புது ட்ரெண்ட் அடித்துள்ளனர். இணையத்தில் பலராலும் பார்த்து, பகிரப்பட்ட வீடியோக்களின் தொகுப்பு இதோ. 

 

 

...