வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (09/09/2017)

கடைசி தொடர்பு:19:13 (09/09/2017)

’போகன்’ தெலுங்கு ரீமேக்கில் எஸ்.ஜே.சூர்யா..!

இயக்குநராக இருந்து தற்போது நடிகராகத் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவரது நடிப்பில் தற்போது அட்லியின் 'மெர்சல்', அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ’இறவாக்காலம்’,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்' உள்ளிட்ட படங்கள் கையில் உள்ளன. இதற்கிடையில் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ' போகன்' படத்திலும் நடிக்கப்போகிறார்.

s.j.surya

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடிப்பில் லட்சுமணன் இயக்கிய திரைப்படம் 'போகன்'. இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இந்தப் படத்தில் வில்லன் ரோலில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். இவரின் ரோலில்தான் தற்போது தெலுங்கு போகனில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி கேரக்டரில் ரவி தேஜா நடிக்கவுள்ளார். ஹன்சிகா கேரக்டரில் 'மெட்ராஸ்' படத்தில் நடித்த கேத்ரினா தெரசா நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது எனப் படக்குழு அறிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க