வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (10/09/2017)

கடைசி தொடர்பு:15:45 (10/09/2017)

விஷால் , பிரசன்னா நடிப்பில் துப்பறிவாளன் டிரெய்லர்

நடிகர் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவுள்ள படம் துப்பறிவாளன். 

இந்த படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர ஆண்டிரியா, அனு இம்மனுவேல், சிம்ரன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஷால் கணியன் பூங்குன்றனார் என்ற துப்பறியும் அதிகாரியாக நடித்துள்ளார்.நடிகர் வினய் வில்லனாக நடிதுள்ளார். வழக்கமான மிஷ்கின் படம் போல் இந்த படத்திலும் பல இரவு நேர காட்சிகள் , அதிரடி சண்டை என ’டிரெய்லர்’  முழுவதும் அதிரடியாக உள்ளது. டிரெய்லர் முழுக்க அதகளம் செய்து இருக்கிறது அரோல் கொரெலியின் இசை. 

டிரெய்லர் முழுக்கவே சர் ஆர்தர் கோனான் டாய்லின் ஷெர்லாக் ஹோம்ஸ் சாயல் இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு பெயர் சொல்லும் விஷாலின் 'ஷெர்லாக்' வசனங்கள் மிக ஷார்ப். விஷால் தயாரித்து இருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளியன்று வெளியாகிறது.