வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (11/09/2017)

கடைசி தொடர்பு:20:40 (11/09/2017)

கெளதம் கார்த்திக்கின் அடுத்த படத்தின் டைட்டில் தெரியுமா!

அறிமுக இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் எடுத்திருக்கும் திரைப்படம் 'ஹரஹர மஹாதேவகி'. கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.


படத்தின் டீசர் வெளியாகி வைரலான நிலையில், சமீபத்தில்தான் படத்தின் பாடல் வெளியானது. பாடல் வெளியீட்டில் பேசிய இயக்குநர் சந்தோஷ், தனது இரண்டாவது படத்தையும் கெளதம் கார்த்திக்குடன் எடுக்கப்போவதாக கூறியுள்ளார். இந்தப் படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கவுள்ளது. இவர்கள் கூட்டணியில் மறுபடியும் உருவாகும் படத்தின் பெயரைக் கேட்டு பலரும் அதிர்ந்திருக்கின்றனர். 
'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' என்பதுதான் படத்தின் பெயர். மேலும், சந்தோஷ் இயக்கத்தில் இரண்டாவது படத்தில் நடிப்பதும் ஹாப்பியாக உள்ளது என தெரிவித்திருக்கிறார் கெளதம் கார்த்திக். கெளதம் ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றி விரைவில் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க