வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (12/09/2017)

கடைசி தொடர்பு:18:51 (12/09/2017)

வைரலாகும் விஜய் சேதுபதியின் லேடி கெட்டப் போட்டோ..!

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இரண்டாவதாக இயக்கும் திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் என பலர் நடிக்கும் இந்தப் படம், த்ரில்லர் மூவியாக ரெடியாகி வருகிறது. மேலும், இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கினும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னதாக இந்தப் படத்தின் பெயர் 'அநீதி கதைகள்' என பெயரிடப்பட்டு தற்போது 'சூப்பர் டீலக்ஸ்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நிரவ்ஷா மற்றும் வினோத் ஒளிப்பதிவு செய்கின்றனர். இந்தப் படத்துக்கான திரைக்கதையை தியாகராஜா குமாராஜனுடன் சேர்ந்து நலன் குமாரசாமி மற்றும் மிஷ்கின் எழுதியிருக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கெட்டப் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் தொடங்கி பல முன்னணி ஹீரோக்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் விஜய் சேதுபதியும் சேர்ந்திருக்கிறார்.  இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற பெண் வேடத்தில் நடிக்கிறார். தற்போது அந்த கதாபாத்திரத்துக்கான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க