Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
##~##

•  முழங்காலுக்குக் கீழ் இரு கால்களும் துண்டிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கத் தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கான எனர்ஜி டானிக். 11 மாதக் குழந்தையாக இருந்தபோதே இரண்டு கால் களையும் இழந்த ஆஸ்கர் பிஸ்டோரியஸ் சிறு வயதிலேயே தடகளம், ஹாக்கி, நீச்சல் எனப் பல்வேறு விளையாட்டுக்களில் பயிற்சி பெற்றார். தற்போது உலகத் தடகளப் போட்டி களில் செயற்கைக் கால்களுடன் பொதுப் பிரிவில் கலந்துகொண்டு, அத்தனை பேரோடும் போட்டி போட்டு  ஆச்சர்யப்படுத்தினார் பிஸ்டோரியஸ். மிஸ்டர் நம்பிக்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  வின்டேஜ் கார்கள்போல வின்டேஜ் வீடுகள்தான் இப்போது லேட்டஸ்ட் ஃபேஷன். பழைய வீடுகளை வாங்கி, பழங்காலத்துப் பொருட்களைக்கொண்டு அலங்கரிப்பதுதான் வின்டேஜ் கான்செப்ட். அமிதாப் பச்சன், அமீர் கான், அருந்ததி ராய் என வி.ஐ.பி-க்கள் வின்டேஜ் ஹோம் வாங்கியிருக்கிறார்கள். பழசு புதுசானா, அதுதான் ஃபேஷன்!

• ராகுல் காந்தியின் கண் அசைவை அடுத்து ஹஜாரே மற்றும் ராம்தேவ் முகாம்களில் புகுந்திருக்கிறது வருமான வரித் துறை. இதில் வெடவெடத்துப் போய் இருப்பது யோகா குரு பாபா ராம்தேவ் தான். ஸ்காட்லாந்தில் சொகுசுத் தீவு வாங்கியதிலும், வெளி நாட்டு வங்கிகளில் முதலீடு செய்ததிலும் விதிமுறைகளை மீறி இருப்பதாக வழக்குகள் பாய, சாமி இப்போ செம சைலன்ட். 'ஆ’சாமி!

இன்பாக்ஸ்

•  கடந்த வாரம் கொல்கத்தா முழுக்க மெஸ்ஸி ஃபீவர். கொல்கத்தாவில் நடைபெற்ற அர்ஜென்டினா-வெனிசுலா நட்பு கால்பந்துப் போட்டியில் பங்கேற்ற அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸியைப் பார்ப்ப தற்காகத் திரண்ட ரசிகர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டி எகிறியது. மெஸ்ஸி அணிந்து விளையாடிய ஜெர்சியைப் பல லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தவர் இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி. இவ்ளோ பில்ட் - அப்புக்கு ஒரு கோல்கூடப் போடலையே மெஸ்ஸி!

இன்பாக்ஸ்

• சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைக் கதையாகக்கொண்டு இந்தியில் உருவாகும் படம் 'டர்ட்டி பிக்சர்’. அதில் சில்க் ஸ்மிதாவாக நடிக்கும் வித்யாபாலன், ''கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் எனக் கொள்கை வைத்திருந்தேன். ஆனால், அதை டர்ட்டி பிக்சரில் அப்படி என்னால் கட்டுப்பாடாக இருக்க முடியவில்லை. கதையும் சில்க்கின் கேரக்டரும் அப்படி. கொஞ்சம் எல்லை மீறிவிட்டேனோ என்று தோன்றுகிறது!'' என்று வித்யா கொடுத்த பேட்டியால் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. டர்ட்டி பியூட்டி!

•  'நாளைய இயக்குநர்’ புகழ் பாலாஜி இயக்குநர் ஆக இருக்கிறார். 'காதலில் சொதப்புவது எப்படி?’ என்ற குறும்படம் மூலம் கவனத்தை ஈர்த்தவரின் படத்தில் சித்தார்த்தும் அமலாபாலும் நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்துக்காகத்தான் '3’ படத்தில் இருந்து மைனா விலகியதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். கால்ஷீட்டில் சொதப்புவது எப்படி?

•  விஜய்யின் 'வேலாயுதம்’, சூர்யாவின் 'ஏழாம் அறிவு’, சிம்புவின் 'ஒஸ்தி’, தனுஷின் 'மயக்கம் என்ன?’ என தீபாவளி ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன ஸ்டார் வேல்யூ படங்கள். இதற்கிடையே ஷாரூக் கானின் 'ரா-ஒன்’ படமும் ரிலீஸ் ஆவதால் பரபரத்துக்கிடக்கிறது கோலிவுட். பவர் ஸ்டார் படம் வருதா?

இன்பாக்ஸ்

•  'யு டி.வி.’ சேனலின் 'லிவ் மை லைஃப்’ நிகழ்ச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியால் பரபரத்துக்கிடக்கிறது. தனக்குப் பிடித்த பிரபலத்தோடு டி.வி. நேயர் ஒருவர் டிபன் சாப்பிடுவதும், ஊர் சுற்றுவதும்தான் கான்செப்ட். புனேவைச் சேர்ந்த 21 வயது பிரியங்காவுக்கு பாலிவுட்டின் ஹாட் சாக்லேட் சோனாக்ஷி சின்ஹாவுடன் பொழுதைக் கழிக்க அடித்தது ஜாக்பாட். முதல் நாள் ஆப்சென்ட் ஆன சோனாக்ஷி, பிரியங்காவுக்கு ஒரு ஐ-பாட், சில டி-ஷர்ட்ஸ் மட்டும் கொடுத்துவிட்டாராம். மறுநாள் காலை உணவாக ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும் வர, பிரியங்கா டரியல் ஆகிவிட்டாராம். 'என்னப்பா புரொகிராம் நடத்துறீங்க?’ என்று இந்தி மீடியாக்களில் வதந்திகள் வாரிச் சுழன்று அடிக்க, அவசரமாக மறுத்து வருகிறார் சோனாக்ஷி. எல்லாமே 'புரொகிராம்’தான்!

•  சென்னையில் உள்ள அரசுப் பேருந்துகள் பச்சை நிறத்துக்கு மாறு கின்றன. சென்னையைத் தொடர்ந்து மற்ற ஊர்களுக்கும் பச்சை நிறப் பேருந் துகள் படை எடுக்குமாம். பச்சை நிறமே... இச்சை நிறமே!

இன்பாக்ஸ்

•  பாப் உலகின் பர்பி டால் பிரிட்னிக்கு டிசம்பர் வந்தால் வயது 30. இந்த பர்த்டேயை ரொம்பவே சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு இருக்கிறார் பிரிட்னி. 'அடுத்த 10 வருடங்கள் கழித்து எப்படி இருப்பேன் எனத் தெரிய வில்லை. அதற்கும் சேர்த்து இப்போது கொண்டாடப் போகிறேன்!’ என்கிறார் பிரிட்னி. இனியவை முப்பது!