இயக்குநர் நலன் குமரசாமியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!

’சூதுகவ்வும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நலன் குமரசாமி, அடுத்து ’காதலும் கடந்து போகும்’ படத்தை இயக்கினார். இவை தவிர  ’தீயா வேலைசெய்யணும் குமாரு’, ’மாயவன்’ படங்களின் திரைக்கதை உருவாக்கத்திலும் இவரின் பங்கு உண்டு. 

இவருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரண்யாவுக்கும் இன்று காலை புதுகோட்டையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருவரின் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டனர். 

பெற்றோர்கள் பார்த்துவைத்த இந்த ஜோடியின் திருமணம் நவம்பர் 9-ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. 

நலன் குமரசாமிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!