Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அநீதிக்கதைகள்னு' புரளியைக் கிளப்பி விட்டுட்டாங்க..! 'சூப்பர் டீலக்ஸ்' மேக்கிங் பற்றி சொல்கிறார் தியாகராஜன் குமாரராஜா

விஜய் சேதுபதியின் கால்ஷீட் டைரி இந்த வருடம் இறுதி வரை ஃபுல்லாகதான் இருக்கிறது. தனது கைவசம் 96, ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், கருப்பன், ஜூங்கா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதனாலேயே மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என விஜய் சேதுபதி தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இதற்கிடையில் 'ஆரண்ய காண்டம்' படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் லேடி கெட்டப் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாராஜனிடம் எந்தக் காரணத்துக்காக படத்தின் பெயர் 'அநீதி கதைகள்' என்பதிலிருந்து  'சூப்பர் டீலக்ஸாக' மாறியது என்பது பற்றியும், படத்தின் சுவாரசியங்களையும் பற்றியும் தெரிந்து கொள்ள பேசினோம்.

'நான் எப்போது என் படத்தின் பெயர்  'அநீதிக் கதைகள்' என்று சொன்னேன். எந்தக் காரணத்துக்காக இந்தப் படத்தின் பெயர் 'அநீதிக் கதைகள்' என்று புரளியைக் கிளப்பி விட்டார்கள் என்று தெரியவில்லை. 'சூப்பர் டீலக்ஸ்' தான் என் படத்தின் பெயர். அதை சமீபத்தில்தான் அதிகாரபூர்வமாகச் சொன்னோம். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறோம். அதனால்தான் விஜய் சேதுபதியின் லேடி கெட்டப் போட்டோவை வெளியிட்டோம்" என்றவரிடம் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் விலகியது ஏன் என்று கேட்டதற்கு, இந்தப் படத்துக்காக  முதலில் பி.சி.ஶ்ரீராமிடம்தான் பேசினோம்.

அந்த நேரத்தில் இந்தி படம் 'பால்கி'யில் அவர் பிஸியாக இருந்தார். அதனால் அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. தற்போது படத்துக்கான ஒளிப்பதிவை பி.எஸ்.வினோத் மற்றும் நிரவ்ஷா இருவரும்  செய்கிறார்கள். வினோத்துக்கும் கால்ஷீட் பிரச்னை. அதனால்தான் சில காட்சிகளை வினோத்தும்  மற்றும் சில காட்சிகளை நிரவ்ஷாவை வைத்தும் ஷூட் செய்ய வேண்டியதாகய உள்ளது. படத்துக்கான திரைக்கதையை மிஷ்கின், நீலன் சேகர், நலன் குமாரசாமி உள்ளிட்டோர் என்னுடன் எழுதியிருக்கிறார்கள்'' என்றவரிடம்,   ஒன்றுக்கு மேற்பட்ட இயக்குநர்கள் திரைக்கதையில் இருப்பதால் பல குறும்படங்களின் தொகுப்புதான் 'சூப்பர் டீலக்ஸ்' படமா என்றால், படத்தின் பெயர் 'அநீதிக் கதைகள்' என்பது எப்படி பலரின் பேச்சாகயிருந்ததோ அதேப் போல்தான் இதுவும்.  'சூப்பர் டீலக்ஸ் ' ஒரு முழுமையான திரைப்படம். இதற்கு மேல் இதைப் பற்றி வேறு எதுவும் சொல்ல முடியாது' என்றார் படத்தின் இயக்குநர் தியாகாராஜன் குமாரராஜா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement