Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீரியலுக்கு என்ட்ரி தரும் நடிகை ரேவதி!

ரேவதி

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத நடிகையாக மாறியவர் நடிகை ரேவதி. நடிகையாக, இயக்குநராக பல படங்களில் தன் திறமையை நிரூபித்துக் காண்பித்தவர். தனது திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர். இவர் நடித்த 'மெளனராகம்', 'மண் வாசனை' போன்ற பல படங்கள் இன்றளவும் பலராலும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்படித் தனித்தன்மை வாய்ந்த நடிகையான ரேவதி புதிய களத்தில் இறங்கப்போகிறார்.

பொதுவாகவே, குஷ்பு, மீனா, பானுபிரியா எனப் பல முன்னணி நடிகைகளும் டி.வி சீரியல், ரியாலிட்டி ஷோ எனக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் தற்போது ரேவதியும். 'அழகு' என்கிற கிராமத்துக் கதைக்களம் கொண்ட ஒரு சீரியலில் நடிக்கவிருக்கிறார். இந்த சீரியலில் இவரது கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்பப் பின்னணி கொண்ட இந்தக் கதையில் பக்கா அனுபவமுள்ள பெண்ணாக நடிக்கிறார் ரேவதி. சமீபத்தில் வெளியான 'பவர் பாண்டி' படத்தில் தனது நடிப்பில் தனித்தன்மையைக் காட்டியிருந்தார். இது மட்டுமல்லாமல் பல ஹீரோக்களின் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement