வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (18/09/2017)

கடைசி தொடர்பு:07:47 (19/09/2017)

விஜய் சேதுபதி நடிப்பில் 'கருப்பன்' பட ட்ரெய்லர்

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்திருக்கும் கருப்பன் பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி

'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய இயக்குநர் பன்னீர்செல்வம், விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளப் படம் 'கருப்பன்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். இவர், சசிகுமார் நடித்த ’பலே வெள்ளையத்தேவா’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். டி.இமான் படத்துக்கு இசையமைத்துள்ளார். பசுபதி, பாபி சிம்ஹா, கிஷோர், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, படத்துக்கு சென்சார் போர்டு 'யூ' சான்றிதழ் கொடுத்தது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜைக்குப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.