Published:Updated:

அரசு கேபிள் டி.வி. ஹிட்டா... அபீட்டா?

ம.கா.செந்தில்குமார்

அரசு கேபிள் டி.வி. ஹிட்டா... அபீட்டா?

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##

நீண்ட நெடிய காத்திருப்பு, உள்குத்து அரசியலுக்குப் பிறகு, ஒருவழியாக ஒளிபரப்பைத் துவங்கிவிட்டது 'அரசு கேபிள் டி.வி.’! எப்படி இருக்கிறது வரவேற்பு?

 தமிழகம் முழுக்கப் பரவியுள்ள... கிட்டத்தட்ட 40 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்களுள் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு கேபிள் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட விருப்பம் தெரிவித்து இருந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசு கேபிள் டி.வி. ஹிட்டா... அபீட்டா?

70-க்கு 90 சேனல்கள் என்ற அரசின் அறிவிப்பும் கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால், ஒளிபரப்பின் சேவையும் தரமும் அந்தக் கவர்ச்சியைத் தக்கவைத்ததா?

''இல்லை!'' என்று உதடு பிதுக்குகிறார்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளான கேபிள் ஆபரேட்டர்கள்.

அரசு கேபிள் டி.வி. ஹிட்டா... அபீட்டா?

''முதலில் இலவச சேனல்களை ஒளிபரப்புவோம். படிப்படியாக சம்பந்தப்பட்ட கட்டண சேனல்களுடன் பேசி அதையும் எங்கள் சேவைக்குள் கொண்டு வருவோம் என்றது அரசுத் தரப்பு. ஆனால், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக சன், ஸ்டார் குழும கட்டண சேனல்கள் தெரியாத எரிச்சலில் பொதுமக்கள் தத்தமது ஏரியா கேபிள் ஆபரேட்டர்களைக் காய்ச்சிவருகிறார்கள். கட்டண சேனல்களுக்காக டி.டி.ஹெச் சேவைக்குத் தாவிவருகிறார்கள். ஒரே வாரத்தில் டி.டி.ஹெச். சேவைக்கு டிமாண்ட் அதிகமாகிவிட்டது!'' என்கிறார் ஒரு கேபிள் டி.வி. ஆபரேட்டர்.

இதுகுறித்து அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவரான யுவராஜிடம் பேசினோம். ''சென்னையைத் தவிர, மற்ற ஊர்களில் 100-ல் தொடங்கி 250 ரூபா வரை கேபிள் கட்டணமாக வசூலித்துவந்தோம். இந்த நிலையில்தான் கேபிள் தொழிலின் ஏகபோக கட்டுப்பாட்டைத் தடுக்கக் கிளம்பிய அரசு கேபிள் டி.வி. எங்களுக்கு புத்துணர்வையும் நம்பிக்கையையும் அளித்தது.  அரசு கேபிள் ஒளிபரப்பு தொடங்கி சில நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள் அனைத்து மக்களை யும் திருப்திப்படுத்துவது இயலாத காரியம்.

அரசு கேபிள் டி.வி. ஹிட்டா... அபீட்டா?

ஆனால், நாளடைவில் மக்கள் விரும்பிக் கேட்கும் கட்டண சேனல்கள் அரசு கேபிளில் ஒளிபரப்பாகுமா என்பது சந்தேகம்தான். ஆனால், நாங்கள் 'அம்மா’ என்ற ஒரே குடையின் கீழ் ஒதுங்கி இருக்கிறோம். சீக்கிரமே நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்!'' என்கிறார் யுவராஜ்.

கிட்டத்தட்ட இதே விஷயங்களை வழிமொழியும் தஞ்சாவூரைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டரான வாசு, ''நான் எம்.எஸ்.சி. பட்டதாரி. 1989-ல் இந்தத் தொழிலுக்கு வந்தேன். இதைத் தவிர, வேறு தொழில் எனக்குத் தெரியாது. என்னைப்போல்தான் கேபிள் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் சக தோழர்களும். கேபிள் வயர், வேலை செய்பவர்களுக்கான சம்பளம், மின் செலவு, உபகரணங்கள் போன்ற செலவினங்களுக்கு மத்தியில் 70 ரூபாய்க்கு இணைப்பு என்பது எங்களுக்கு நஷ்டம்தான். ஆனால், தமிழகம் முழுக்கப் பரவலாக அரசு கேபிள் டி.வி-யின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதிக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். ஆனால், மெகா சீரியல், புது சினிமாக்களை ஒளிபரப்பும் சன் மற்றும் விஜய் போன்ற சேனல்கள் வராததால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அரசு கேபிள் டி.வி-யின் கீழ் செயல்படும் சில ஆபரேட்டர்கள் அந்தக் கோபத்துக்குப் பயந்து இன்னமும் முந்தைய லிங்கிலேயே கட்டண சேனல்களை ஒளிபரப்பிவருகின்றனர். கட்டண சேனல்கள் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வர வேண்டும். அல்லது அரசாங்கம் ஏறி வந்து அவர்களை தங்கள் வழிக்குக் கொண்டுவர வேண்டும்!'' என்கிறார் வாசு.

அரசு கேபிள் டி.வி. ஹிட்டா... அபீட்டா?

இதுகுறித்து அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''ஆரம்பத்தில் இலவச சேனல்களை ஒளிபரப்புவோம். படிப்படியாகக் கட்டணச் சேனல்கள் ஒளிபரப்பப்படும்'' என அம்மாவே தெளிவாகச் சொல்லி இருக்கிறார். கட்டண சேனல்களைச் சேர்ப்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. விரைவில் அவை அரசு கேபிள் டி.வி-யில் சேரும்!'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

நல்லது நடந்தால் சரி!