Published:Updated:

தமிழகத்தின் ஒன் அண்ட் ஒன்லி அமைச்சர்!

சமஸ், க.நாகப்பன்படம் : ப.சரவணகுமார்

தமிழகத்தின் ஒன் அண்ட் ஒன்லி அமைச்சர்!

சமஸ், க.நாகப்பன்படம் : ப.சரவணகுமார்

Published:Updated:
##~##

ம்மகிட்டயே லொள்ளா? உங்களுக்கு செம தில்லு!''- சத்யராஜின் வரவேற்பு!

''ம்... உடனே சொல்லணுமா? அப்போ உடனே கேளுங்க!'' - தா.பாண்டியனின் பரபரப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறீங்களே?'' - கோவை சரளாவின் தயக்கம்!

''கேள்வி வில்லன். பதில் சொல்றவன் ஹீரோ. வில்லனை எதிர்த்துக் காலி பண்ற மாதிரி கேள்வியையும் சாய்ச்சுடுவேன். சில சமயம் ஹீரோ தோக்குற மாதிரி தெரியும். ஆனா, ஜெயிச்சுடுவாரு. நான் ஹீரோ!''- பேரரசுவின் டெரர்!

''எனக்கு காமெடி பிடிக்கும். ஆனா, என்னையே காமெடி பீஸ் ஆக்க ட்ரை பண்றீங்கபோல. பார்க்கலாம், நீங்களா... நானான்னு!'' - கலா மாஸ்டரின் சவால்!

ஸ்டார்ட் மியூஸிக்...

தமிழகத்தின் ஒன் அண்ட் ஒன்லி அமைச்சர்!

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குறட்டைவிட்டுத் தூங்கியதால், 'அவரை எழுப்பிவிடுங்கள்’ என்று சபாநாயகரால் மைக்கில் அறிவிக்கப்பட்ட எம்.பி. யார்?

பதில்: லாலுபிரசாத் யாதவ்.

சத்யராஜ்: ''இவரு மட்டும்தான்னு சொல்ற மாதிரி ஒருத்தர் மட்டுமா தூங்குறாங்க? நீங்க சொல்ற அந்த ஒத்தை ஆள் யாருன்னு தெரியலையே. கெரகம்... யாரா இருந்தாலும் குறட்டை விடாமத் தூங்கச் சொல்லுங்கப்போய்!''

தா.பாண்டியன்: ''நான் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. அதனால, யார் தூங்கிட்டு இருந்தாங்கன்னு நான் பார்க்கலை. பத்திரிகைகள்ல செய்தி வந்திருக்கலாம். ஆனா, நான் கவனிக்கலை!''

கோவை சரளா: ''நானே பார்த்து இருக்கேனே... ஆனா, ஒருத்தர் இல்லை. நிறையப் பேர் தூங்கிட்டு இருந்தாங்க. ரொம்ப தமாஷா இருந்தது. நீங்க அந்த ஒருத்தரைத்தான் கவனிச் சீங்களா? ஹி... ஹி... ஹி! அட, பதில் தெரியலை. அடுத்த கேள்விக்குப் போப்பா!''

பேரரசு: ''ம்... கர்நாடக முதல்வர் தேவகவுடா!''

கலா: ''நான் போய் உக்காந்தாலும் நிச்சயம் தூங்கிருவேன். இப்போ தூங்கினவரு யாருன்னு தெரியலையே!''

'மங்காத்தா’ படத்தில் அஜீத் பெயர் என்ன?

பதில்: விநாயக் மகாதேவ்.

சத்யராஜ்: ''நான் இன்னும் படம் பார்க்கலை பாஸ்!''

தா.பாண்டியன்: ''நான் அந்தப் படத்தோட விளம்பரங்களைப் பார்த்திருக்கேன். அதில், ஒண்ணும் பேர் வந்த மாதிரி நினைவு இல்லையே!''

கோவை சரளா: ''அது என்னவா இருந்தாலும், 'தல’ன்னு தானே கூப்பிடப் போறாங்க!''

பேரரசு: ''ம்... ஜீவா! இல்லையா? பில்லா படத்துல அவருக்கு பில்லான்னுதான் பேரு. அப்போ மங்காத்தாவுல மங்காத்தான்னே போட்டுக்குங்க! ஒன் ப்ளஸ் ஒன் இஸ் ஈக்குவல் டு டூ... டுட்டுட்டூ!''

கலா: ''நான் இன்னும் படம் பார்க்கலையே! நான் ஹெல்ப் லைன் யூஸ் பண்ணிக்கவா? (உடன் இருந்தவரிடம் கேட்டுவிட்டு) வினய். கரெக்டா சார்?''

தமிழகத்தின் ஒன் அண்ட் ஒன்லி அமைச்சர்!

செப்டம்பர் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிறந்த தமிழகத்தின் இரு முக்கியமான தலைவர்கள் யார்?

பதில்: செப்டம்பர் 15-ல் பேரறிஞர் அண்ணா, செப்டம்பர் 17-ல் தந்தை பெரியார்!

சத்யராஜ்: ''அட... அட... இது கேள்வி! செப்டம்பர் 15-ல் பிறந்தவர் அறிஞர் அண்ணா. செப்டம்பர் 17-ல் பிறந்தவர் தந்தை பெரியார். நாம சரித்திரத்துல புலில்லா!''

தா.பாண்டியன்: ''அண்ணா, பெரியார்!''

கோவை சரளா: ''நமக்கு அவ்வளவு பாலிடிக்ஸ் நாலெட்ஜ் இல்லைங்கோ!''

பேரரசு: ''ஒருத்தர் அறிஞர் அண்ணா. இன்னொருத்தர் தெரியலையே!''

கலா: ''அரசியல் தலைவர்கள் பத்தி எனக்கு என்னங்க தெரியும். சினிமாபத்திக் கேட்கவே மாட்டீங்களா?''

தமிழக அமைச்சரவையில் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள்?

பதில்: முதல்வரையும் சேர்த்து மொத்தம் 34.

சத்யராஜ்: ''ஆங்... சொல்ல மறந்துட்டேனே... சரித்திரத்துலதான் நான் புலி. கணக்குல எலி!''

தா.பாண்டியன்: ''23.''

கோவை சரளா: ''ம்...ஹீம்...ஹா... ஒரு 38 இருக்கும்... இல்லைன்னா, அம்மாவுக்கு ராசியான நம்பர் 36. அதைப் போட்டுக்கப்பு!''

பேரரசு: ''அம்மா ஆட்சியில் எத்தனை அமைச்சர் இருந்தாலும், முதலமைச்சர் மட்டும்தான் ஒரே அமைச்சர். ஒன் அண்ட் ஒன்லி அமைச்சர்னு போட்டுக்கலாமா?''

கலா: ''ஒரு 22, இல்லேன்னா, 24 இருக்குமா?''

தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் என்னென்ன?

பதில்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

சத்யராஜ்: ''சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தா மணி... அய்யோ... நல்லா தெரியும்ப்பா எனக்கு. அடச்சே... உதைக்குதே... இருங்க சொல்லிடுறேன்... ம்... ப்ச்.. அவுட்!''

தா.பாண்டியன்: ''அடடா... நான் அஞ்சாவது படிச்சப்ப கேட்டிருக்க வேண்டிய கேள்வில்ல இது?''

கோவை சரளா: ''சிலப்பதிகாரம்... சீவகசிந்தாமணி, அப்புறம் வந்து மணிமேகலை - தொல்காப்பியம்... ஒண்ணு மறந்துருச்சு. ரொம்ப நாளாச்சா? திடீர்னு சம்பந்தமே இல்லாமக் கேட்டதும் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்!''

பேரரசு: ''மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பெரிய புராணம்!''

கலா: ''என்னங்க... இதெல்லாமா கேட்குறீங்க. படிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரங்க!''

நளினி-முருகனின் மகள் பெயர்?

தமிழகத்தின் ஒன் அண்ட் ஒன்லி அமைச்சர்!

பதில்: ஆரித்ரா.

சத்யராஜ்: ''ஆரித்ரா. நிறைய கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டேன்போல. அடடா, பாஸ் பண்ணிட்டேனா பெரிய விஷயங்க!''

தா.பாண்டியன்: ''பவித்ராவா... இல்லை, இல்ல... அரித்ரா... ம்... ஹூம்... ஆரித்ரா! சரியா?''

கோவை சரளா: ''ஆரித்ரா!''

பேரரசு: ''ஆரித்ரா!''

கலா: ''ஆரித்ரா!''

தமிழகத்தின் ஒன் அண்ட் ஒன்லி அமைச்சர்!