Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’மெர்சல்’ படத்தின் டீசர்..!

மெர்சல் டீசர்

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் - அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. 

 

 

 

’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் டீசருக்காகப் பலரும் காத்திருந்தனர். தற்போது மெர்சல் படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement