சாமி 2 படத்தில் இவர்கள்தான் நடிக்கிறார்களா? | list of artists to act in Saamy-2

வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (22/09/2017)

கடைசி தொடர்பு:21:32 (22/09/2017)

சாமி 2 படத்தில் இவர்கள்தான் நடிக்கிறார்களா?

சீயான் விக்ரம், த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த படம் 'சாமி'. இதில் வரும் பெருமாள் பிச்சை கதாபாத்திரமும் படத்தின் வசனமும் படம் திரைக்கு வந்து 14 வருடமாகியும் மனதைவிட்டு நீங்காதவை. ஹரியின் அதிவேகத் திரைக்கதைக்கு ஆரம்பமே இந்தப் படம்தான் என்று சொல்லலாம்.

சாமி 2

இந்நிலையில், சூர்யாவை துரைசிங்கமாக மூன்று முறை அழகு பார்த்த ஹரி, தற்போது மீண்டும் ஆறுச்சாமியை நம் கண்முன் கொண்டு வரவிருக்கிறார். படத்தில் யாரெல்லாம் நடிப்பார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி நிற்க சட்டென்று ஒரு பதில் தோட்டாவைப்போல வந்து விழுந்தது. அந்தத் தோட்டாதான் பாபி சிம்ஹா. பெருமாள் பிச்சை கதாபாத்திரத்துக்குப் பதிலாக இந்தப் படத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார் என்றும், அதுவும் 10 மடங்கு பெருமாள் பிச்சையாக வந்து மிரட்டுவார் என்ற ட்விஸ்டும் வைத்திருக்கிறார் ஹரி.

சாமி

 
மேலும், படத்தில் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. படத்தில் புவனா ஆறுச்சாமியாக த்ரிஷாவும், இன்னொரு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் நடிக்கயிருக்கிறார்கள் என்பது அறிந்த ஒன்று. படத்தின் புதிய அப்டேட்ஸாக காமெடியெனாக சூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தில் பிரபு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக தேவி ஶ்ரீ பிரசாத்தும் ஒளிப்பதிவாளராக ப்ரியனும் ஒப்பந்தமாகி உள்ளனர். கெளதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தின் ஷெட்யூல் முடிந்த பிறகு, படப்பிடிப்பைத் தொடங்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு ஆரம்பிக்காமலே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க