Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சங்கமித்ரா' படத்தில் ஸ்ருதிஹாசனுக்குப் பதிலாக இவர் நடிக்கிறாரா?

 சுந்தர்.சி இயக்கத்தில், எட்டாம் நூற்றாண்டின் சம்பவங்களை வைத்து மிகப் பிரமாண்டமாக 'சங்கமித்ரா' படம் உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கதையில், நாயகர்களாக ஜெயம் ரவியும் ஆர்யாவும் ஒப்பந்தமாகினர். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, அறிமுக விழாவில் கலந்துகொள்ள கேன்ஸ் வரை சென்ற ஸ்ருதிஹாசன், படத்திலிருந்து விலகினார். படப்பிடிப்புக்குத் தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்ட நிலையில், 'சங்கமித்ரா' படத்தின்மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைத் தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்குத் தரப்படவில்லை. படப்பிடிப்புத் தேதிகளும் சரியாக முடிவுசெய்யப்படவில்லை. இதுவே, ஸ்ருதி விலகலுக்குக் காரணம் என்று அவரது வட்டாரங்கள் தெரிவித்தன. 

சங்கமித்ரா

 ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரத்துக்கு வேறு யாரை தேர்வுசெய்யலாம் என்ற பணி நடந்துகொண்டே இருந்தது. அதில், நயன்தாரா, ஹன்சிகா ஆகியோரை அணுகி, இறுதிவரை இவர்தான் கதாநாயகி என்று உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில், ஸ்ருதிஹாசனுக்குப் பதிலாக தீஷா படானி ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர், தோனி திரைப்படத்தில் தோனியின் முதல் காதலியாக வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வேலைகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, 'கலகலப்பு 2' படத்துக்கான பணிகளை மேற்கொண்டுவருகிறார் சுந்தர்.சி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement