வெளியிடப்பட்ட நேரம்: 23:06 (25/09/2017)

கடைசி தொடர்பு:23:06 (25/09/2017)

தமிழ் சினிமா மூத்த நடிகர் பீலி சிவம் காலமானார்..!

தமிழ் திரைஉலகின் குணச்சித்திர நடிகர் பீலி சிவம் இன்று உடல் நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. 


பீலி சிவம், 1938-ம் ஆண்டு ஜூலை மாதம் 5 தேதி பிறந்தார். அவருடைய ஆரம்ப கால நாள்களில் நாடகத்தில் நடித்துவந்தார். பின்னர், தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர், அபிமன்யு, தங்க பாப்பா, முகமது பின் துக்ளக் உள்ளிட்ட நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாளைடைவில் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் நாடகங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 1995-ம் நாடகத்துறையில் சிறந்த நடிகருக்கான விருதை தமிழக அரசு வழங்கியது. அவர், உடல் நலக் குறைப்பாட்டின் காரணமாக மதுரையில் இன்று உயரிழந்தார்.