வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (26/09/2017)

கடைசி தொடர்பு:18:50 (26/09/2017)

சுசீந்திரன் இயக்கியிருக்கும் ’நெஞ்சில் துணிவிருந்தால்’ பட டீசர்..!

நெஞ்சில் துணிவிருந்தால்

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன் 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'ஆதலால் காதல் செய்வீர்', 'பாண்டியநாடு' என வரிசையான பல ஹிட் படங்களைக் கொடுத்தார். சமீபத்தில் இவர் இயக்கிய 'மாவீரன் கிட்டு' பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் படத்துக்குப் பிறகு தற்போது அவர் இயக்கியிருக்கும் படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. 'அறம் செய்து பழகு' என பெயரிடப்பட்ட இந்தத் திடைப்படம் சமீபத்தில்தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

 

 

'மாநகரம்' படத்தில் நடித்து கவனம் ஈர்த்த சந்தீப் கிஷன் நாயகனாகவும் மெஹரின் என்கிற புதுமுகம் நாயகியாகவும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, விக்ராந்த், துளசி, தயாரிப்பாளர் சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர். டி,இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான டீசர் பார்மெட்டில் இல்லாமல் சுசீந்திரனின் ’நான் மகான் அல்ல’ படக் காட்சியை வைத்து இந்தப் படத்தின் டீசரை ஆரம்பித்திருக்கிறார்.