Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நியூமராலஜி காரணமாகத் தன் பெயரை மாற்றிய நடிகை சதா!

Chennai: 

'ஜெயம்', 'அந்நியன்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்த நடிகை சதா, தன் பெயரில் மாற்றம் செய்துள்ளார். 'ஜெயம்' படத்தின்மூலம் தெலுங்கிலும் தமிழிலும் அறிமுகமாகி, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகை, சதா. இயக்குநர் ஷங்கர் இயக்கிய 'அந்நியன்' படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றவர். அடுத்தடுத்து 'வர்ணஜாலம்', 'எதிரி', 'திருப்பதி', 'உன்னாலே உன்னாலே' ஆகிய படங்களில் நடித்தார். பிறகு, தெலுங்கு,மலையாளம் எனப் பிறமொழிப் படங்களில் நடித்து வந்ததால், தமிழில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டது.

சதா

இவரது படங்கள், சரியான வரவேற்பைப் பெறவில்லை. தமிழில் வாய்ப்புக் குறைந்ததையடுத்து, வடிவேலுவுக்கு ஜோடியாக 'எலி' படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில், தனியார் தொலைக்காட்சியில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தோன்றினார். படங்கள் வாய்ப்பு குறைந்ததால், பெயரை மாற்றினால் நல்ல காலம் பிறக்கும் எனக் கருதி பெயரியல் நிபுணரை ஆலோசித்துத் தன் பெயருடன் சையது எனச் சேர்த்து சதா சையது என மாற்றியுள்ளார். மும்பையைப் பூர்வீகமாகக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement