Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"மோடியின் 'தூய்மையே சேவை' இயக்க முயற்சியை ஆதரிக்கிறேன்" - நடிகர் மம்முட்டி!

பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்த, 'தூய்மையே சேவை' என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை பல நடிகர்களும் ஆதரித்ததைத் தொடர்ந்து, நடிகர் மம்முட்டியும் ஆதரித்திருக்கிறார். 

மம்முட்டி


தூய்மையே சேவை இயக்கத்தின் பிரச்சார தினமாக, கடந்த 15-ம் தேதி முதல் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தூய்மையே சேவை இயக்கத்தில், நடிகர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் இருக்கும் முக்கியப் பிரமுகர்களைப் பங்கேற்றுப் பிரபலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பை, அப்போது நடிகர்கள் பலரும் வரவேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தில் இணைந்தனர். இந்நிலையில், கேரளத் திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டியும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பாக, தனது கருத்துகளை ஃபேஸ்புக்கில், 'தூய்மையே சேவை இயக்கத்தில் சேர பிரதமர் மோடி, எனக்கு விடுத்த அழைப்பை கௌரவமாகக் கருதுகிறேன். தூய்மைக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் பெருமைக்குரியது. மகாத்மா காந்தி தூய்மையை தெய்வாம்சம் என்றார். தூய்மை என்பது சுய கட்டுப்பாடு போல தொடங்க வேண்டும் என்றும், அதைத் திணிக்கக் கூடாது என்றும் நான் கருதிவந்தேன். எனினும் இந்தியாவைத் தூய்மையானதாக மாற்ற புதிய விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். தூய்மை வி‌ஷயத்தில், காந்தியடிகளின் கனவை நனவாக்க, பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஆதரிக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement