Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தெலுங்கில் ரீமேக் ஆகிறது 'குரங்கு பொம்மை'

பணம் பணம் என்று பணத்தின் மேல் உள்ள பேராசையையும், அதனால் எதையும் செய்யத் துணியும் மனப்போக்குடைய ஒருவனையும் ஓர் எளிமையான குடும்ப வாழ்க்கை வாழும் நபரையும் சுற்றி நடக்கும் க்ரைம் த்ரில்லர் கதைதான், 'குரங்கு பொம்மை.'

குரங்கு பொம்மை

அறிமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் விதார்த், டெல்னா டேவிஸ் நடிப்பில் வெளிவந்தது 'குரங்கு பொம்மை.' விதார்த்தின் தந்தையாக வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. செப்டம்பர் 1-ம் தேதி வெளிவந்த இப்படத்துக்கு அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். ஸ்ரேயாஶ்ரீ மூவீஸ் தயாரித்திருக்கிறது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. 'திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குநர் நித்திலன் ஒரு பெரும் திறன்கொண்ட படைப்பாளி. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா வணிகமும் இப்படத்துக்கு பெரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்' என்று இப்படத்தை தெலுங்கில் தயாரிக்கவிருக்கும் எஸ் ஃபோகஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement