வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (28/09/2017)

கடைசி தொடர்பு:20:58 (28/09/2017)

தனுஷ் படத்தில் மலர் டீச்சர்!

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணி இரண்டாவதாக இணையும் 'மாரி-2' படத்தின் நாயகியாக 'பிரேமம்' புகழ் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்திருந்த மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக இருக்கிறது. படத்தின் முதல் பாகத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். அனிருத் இசையில் பாடல்கள் ஆன்லைன் முதல் டீக்கடை வரை ஹிட்டடித்தது. இந்நிலையில், 'மாரி' படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராக இருக்கிறது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க இருக்கும் 'மாரி-2' குறித்த முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிடுவதாக படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் 'மாரி-2' படத்தில் கதாநாயகியாக பிரேமம் புகழ் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் தயாரித்துள்ள முதல் மலையாளப் படமான 'தாரங்கம்' படத்தில் கதாநாயகனாக நடித்த டோவினோ தாமஸ், 'மாரி-2' படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர முதல் பாகத்தைப் போலவே ரோபோ ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு மற்றும் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களைத் தேர்வு செய்வதில் இயக்குநர் பாலாஜி மோகன் பிஸியாக இருக்கிறார். மாரி படத்தின் விமர்சனங்களை மனதில் வைத்தே இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை அமைத்துள்ளதாக பாலாஜி மோகன் கூறியிருந்தார்.