Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் அறிமுக இயக்குநராக களம் இறங்கிய சுசீந்திரன் தமிழ்த் திரையுலகில் பல ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். கடைசியாக, இவர் இயக்கத்தில் விஷ்ணு நடிப்பில் வெளியான 'மாவீரன் கிட்டு' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் இயக்கியிருக்கும் படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. 'அறம் செய்து பழகு' என்ற பெயர் வைத்திருந்த இப்படத்திற்கு சமீபத்தில் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

சுசீந்திரன்

இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாவும் அறிமுக கதாநாயகியாக மெஹரினும் நடித்திருக்கிறார்கள். முன்னணி வேடங்களில் விக்ராந்த், சூரி, துளசி ஆகியோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார். சில நாள்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் வழக்கமாக இல்லாமல் சற்று வித்தியாசமாகவே இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், வரும் தீபாவளியன்று படம் ரிலீஸ் ஆகும் என்ற பட்சத்தில் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 3-ம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement