Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'யாரும் கோபப்பட வேண்டாம்!'- தன்ஷிகா விஷயம் குறித்து வெங்கட் பிரபு கருத்து

'விழித்திரு' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்றது. அந்தப் படத்தில் நடித்த தன்ஷிகா பேசியபோது, அதில் நடித்திருக்கும் மூத்த இயக்குநர் டி.ராஜேந்தரின் பெயரைக் குறிப்பிடவில்லை. அதனால், ஆத்திரமடைந்த டி.ராஜேந்தர், மேடையிலேயே தன்ஷிகாவைக் கடிந்துகொள்ளும் வகையில் பேசினார். அதனால், தன்ஷிகா மேடையிலேயே அழத்தொடங்கினார். இந்த விஷயம்குறித்து டி.ராஜேந்தருக்கு நடிகர் சங்கத் தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

டி.ராஜேந்திர் மற்றும் தன்ஷிகா

இந்த விவகாரம் குறித்து வெங்கட் பிரபு, 'பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என சொல்லி வளர்க்கப்பட்டவன் நான். 'விழித்திரு' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் அவரது கருத்தை தெரிவித்தார். முதலில் தன்ஷிகாவை அவர் கலாய்த்தது போல் தெரிந்தாலும் பின்னர் அது சீரியஸாக மாறியது. தன்ஷிகா, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் ஒரு புதுமுகம். அவருக்கும் பொதுத் தளத்தில் பேசுவதில் அனுபவம் சற்று குறைவு. நம்மைப் போன்ற பெரியவர்கள்தான் அவரை வழிநடத்த வேண்டும் என்று நம்புகிறேன். வழிநடத்துவது என்பது கடவுளுக்குப் புரியும் செயலைப் போன்றது. இந்த விஷயம்குறித்து இனியும் யாரும் கோபப்பட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரை புண்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த லாபமும் கிடையாது. மிக மரியாதையாகவே இந்த விஷயத்தையும் தெரிவிக்கிறேன்' என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement