’கொடிவீரன்’ படத்தின் டீசர் வெளியானது!

நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியுள்ள ‘கொடிவீரன்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

கொடிவீரன்

'மருது' படத்துக்குப் பிறகு, இயக்குநர் முத்தையா சசிகுமாரை வைத்து 'கொடிவீரன்' என்கிற படத்தை இயக்கிவருகிறார். இந்த இருவரின் கூட்டணியில், ஏற்கெனவே 'குட்டிப் புலி' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், கொடிவீரன் திரைப்படத்தை அவரின் ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமே தயாரித்து வழங்குகிறது.

'கொடிவீரன்' படத்தில் சசிகுமாரோடு பசுபதி, மஹிமா, சனுஷா, வித்தார்த், பூர்ணா, பால சரவணன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இந்தப் படத்தின் வில்லனாக, 'குற்றம் 23' மற்றும் 'தடம்' படத்தின் தயாரிப்பாளரான இந்திரகுமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளார், S.R.கதிர்தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 'கொடிவீரன்' படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்துவரும் நிலையில், கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விஜயதசமியான இன்று மாலை இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!