Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கேளிக்கை வரி ஒரு பக்கம்... சினிமா திருட்டு ஒரு பக்கம்!' - விஷால் ஆவேசம்

Chennai: 

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவிகித ஜி.எஸ்.டி. வரியுடன் 30 சதவிகித கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம் செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரைப்படங்களுக்கான புதிய உத்தரவுப்படி கேளிக்கை வரி 30 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மொழி புதிய திரைப்படங்களுக்கு 20 சதவிகிதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களுக்கு 7 சதவிகிதமும் மற்ற மொழிப் படங்களுக்கு 14 சதவிகிதமும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது போடப்பட்டிருக்கும் புதிய வரி விதிப்பால், தியேட்டர்களில் டிக்கெட் விலை ஏறக்கூடும் என்று கூறப்படுகிறது. 
 

நடிகர் விஷால்

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், 'கேளிக்கை வரி உயர்வு தயாரிப்பாளர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் மற்றொரு சுமை. இதுகுறித்து சீக்கிரமே தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் கூட்டம் நடத்தப்பட்டு ஒரு முடிவு எட்டப்படும். தயாரிப்பாளர்களுக்கு இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அரசாங்கத்திடம் சீக்கிரமே இது குறித்து பேசுவோம். தமிழக அரசு, சினிமா துறையினரை வஞ்சிக்கிறதா என்பது குறித்து என்னால் கருத்து கூற முடியாது. தமிழ்நாடு அரசுதான் அதுகுறித்து பதிலளிக்க வேண்டும். தமிழ் சினிமாவின் நிலை மிகவும் மோசமாகவே இருக்கிறது. சினிமா துறையினர் மிகவும் சோதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். கேளிக்கை வரி போடும் அரசாங்கத்தால் சினிமா திருட்டை ஒழிக்க முடியுமா? அதற்கான உத்தரவாதத்தை கொடுக்க முடியுமா? சினிமா திருட்டை 100 சதவிகிதம் ஒழித்துவிட்டால் இதைப் போன்ற நடவடிக்கையைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். ஒரு பக்கம் சினிமா திருட்டு, ஒரு பக்கம் கேளிக்கை வரி என்று இருப்பது மேலும் மேலும் சுமையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மற்ற மாநிலங்களில் வெறும் ஜி.எஸ்.டி வரி மட்டும் இருக்கும் நிலையில், இங்கு மட்டும் கூடுதல் வரி இருப்பதற்கான காரணம் என்ன?' என்று மாநில அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement