சிவாஜி- ஒரு சரித்திரம்! #HBD_SivajiGanesan | actor sivaji ganesan's birthday

வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (01/10/2017)

கடைசி தொடர்பு:10:59 (01/10/2017)

சிவாஜி- ஒரு சரித்திரம்! #HBD_SivajiGanesan

தமிழ்சினிமாவின் பல்கலைக்கழகம் என புகழ்கொண்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் 90-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சிவாஜி

தமிழ்சினிமா பாடல்களால் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் அதை தன் வசனநடிப்பால் மறக்கடித்து முற்றிலும் காட்சியமைப்பு மற்றும் வசனங்களின்பால் சினிமா மீது மக்கள் ஈர்க்கப்பட காரணமானவர்களில் தவிர்க்கவியலாதவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். ஒப்பிட முடியா நடிப்பாலும், அயரா உழைப்பாலும் பல முத்தான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த வள்ளல். கணேச மூர்த்தி என்ற இயற் பெயரோடு சின்னையா மன்றாயர் மற்றும் ராஜாமணி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக திரு சிவாஜி கணேசன் 1928 ஆம் வருடம் அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார். 

இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகமாக உயிர்ப்பெற்றார். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்களாய் இருப்பார்கள். 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்தனை எதிர்ப்புகளையும் கடந்து நடிகர் திலகமாக உருப்பெற்று, மறைந்தாலும் இன்றும் குன்றா புகழுடனே திகழ்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.