வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (03/10/2017)

கடைசி தொடர்பு:14:47 (03/10/2017)

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு..! திலீப்குமார் ஜாமீன் பெற்றார்

நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்குமாருக்குக் கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

பிரபல மலையாள நடிகை பிப்ரவரி 17-ம் தேதி மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள மாநிலக் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் மலையாள நடிகர் திலீப்குமாருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஜூலை 10-ம் தேதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே அவர், தொடர்ச்சியாக ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துவந்தார். அவரது ஜாமீன் மனுக்கள்  நிராகரிக்கப்பட்டுவந்தன. இதுவரையில் ஐந்து முறை ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.