வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (05/10/2017)

கடைசி தொடர்பு:09:01 (06/10/2017)

இசையமைப்பாளராகக் கவனம் ஈர்க்கிறாரா சிம்பு... ’சக்கபோடு போடு ராஜா’ சிங்கிள் ட்ராக்..!

சந்தானம், வைபவி நடிக்க சேதுராமன் இயக்கும் திரைப்படம், ’சக்கபோடு போடு ராஜா.’ வி.டி.வி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க முதல் முறையாக சிம்பு இசையமைக்கிறார். இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகும் படம் என்பதால், அதன் அறிவிப்பு வந்ததிலிருந்தே பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. 

தற்போது, இந்தப் படத்தின் ’கலக்கு மச்சான்’ பாடல், சிங்கிள் ட்ராக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை சிம்பு மற்றும் ரோகேஷ் எழுத அனிருத் பாடியுள்ளார். பாடல் வெளியான சில நேரங்களிலேயே அதிக லைக்ஸையும் ஷேர்களையும் கொடுத்து, இசையமைப்பாளர் சிம்புவுக்கும் ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.