குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு..! நடிகர் ஜெய்-க்கு பிடிவாரன்ட்

குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகர் ஜெய்-க்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. 

நடிகர் ஜெய்


நடிகர் ஜெய், கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக ஓட்டிச் சென்ற ஆடி சொகுசு கார் தாறுமாறாக ஓடி, சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. குடிபோதையில் காரை ஓட்டிச் சென்றதாக, நடிகர் ஜெய் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதியதைக் கண்டதும் அங்கு நடந்து சென்றவர்கள் ஓடிவந்தனர். போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சாஸ்திரி நகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். காருக்குள் அரை மயக்கத்தில் இருந்த நடிகர் ஜெய்யை மீட்டனர். அப்போது அவர், உச்சகட்ட குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. விபத்தின்போது ஜெய்யுடன் நடிகர் பிரேம்ஜியும் இருந்தார். காரைப் பறிமுதல்செய்த போலீஸார், திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சோதனைக்காக காரை அனுப்பிவைத்தனர். ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டுதல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது, வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், நடிகர் ஜெய் விசாரணைக்கு ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!