இரண்டு நாளில் நடிகர் ஜெய்யை கைதுசெய்து ஆஜர்படுத்த நீதிபதி அதிரடி உத்தரவு! | Arrest warrant for Actor Jai

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (06/10/2017)

கடைசி தொடர்பு:11:51 (06/10/2017)

இரண்டு நாளில் நடிகர் ஜெய்யை கைதுசெய்து ஆஜர்படுத்த நீதிபதி அதிரடி உத்தரவு!

ஜெய்

இரண்டு நாளில் நடிகர் ஜெய்யை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர், நடிகர் ஜெய். விரைவில் இவரது 'பலூன்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், கடந்த செப்டமர் மாதம் 21-ம் தேதி ஜெய் ஓட்டிச்  சென்ற ஆடி சொகுசு கார் தாறுமாறாக ஓடி, சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது.  கார் மோதியது தெரிந்ததும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரை மயக்கத்தில் இருந்த நடிகர் ஜெய்யை மீட்டனர். அப்போது, அவருடன் நடிகர் பிரேம்ஜியும் உடனிருந்தார்.

ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது, வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது.  அதன் பிறகும் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை இரண்டு நாளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க