Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீதிபதி அதிரடி உத்தரவால் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெய்!

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். 


டந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று சாலையின் தடுப்புச்சுவரில் மோதினார் நடிகர் ஜெய். கார் மோதியது தெரிந்ததும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரை மயக்கத்தில் இருந்த நடிகர் ஜெய்யை மீட்டனர். அப்போது, அவருடன் நடிகர் பிரேம்ஜியும் உடனிருந்தார். ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது, வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது.  அதன் பிறகும் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை இரண்டு நாள்களில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு நேற்று நீதிபதி உத்தரவிட்டார். இன்று காலை, நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement